உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்க தேவாங்கர் ஒற்றுமை !வளர்க சமுதாய மேன்மை !

உஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணைஅருள் – அன்பு – அறம்

அனைத்திந்திய தேவாங்கர்ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம்

பதிவு பெற்றது · பதிவு எண். 56/1978, வட சென்னை

வட்டாரங்கள்
140
கிளைகள்
590+
உறுப்பினர்கள்
49,000+

நோக்கங்கள்

அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம் கீழ்கண்ட நோக்கங்களைக் கொண்டதாகும்.

  1. இது ஒரு சமூகநல மன்றமாகும். தேவாங்க சமூகத்தின் ஒருங்கிணைந்த முன்னேற்றம் கருதி, இச்சமூகத்தின் எல்லா அங்கத்தினர்களையும் ஒரே கட்டுக்கோப்பின்கீழ் அணைத்துக்கொள்வது. மேலும் இயன்றவரையிலும் இதர சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுவது.

  2. பல்வேறு ஊர்களில் இச்சமூக பொதுநலனுக்காக அமைக்கப்பட்டு இயங்கிவரும் சங்கங்களை இணைத்த மத்திய அமைப்பாக இம்மன்றத்தை உருவாக்கிக்கொள்வது. மேலும் இனிமேல் ஏற்படும் சங்கங்களையும் இணைத்து இயங்குதல்.

  3. இச்சமூகத்தின் எல்லா அங்கத்தினர்களுக்கும் ஒற்றுமை உணர்வு, சகோதர மனப்பான்மை, நல்ல உடல்நலம், சமுதாய உணர்வு, பொருளாதார முன்னேற்றம், கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு, நாகரீகமான வாழ்க்கைமுறைகள், தெய்வபக்தி, தன்னம்பிக்கை ஆகியவைகளை பெற்றுத்தரும் வழிவகைகளை அமைத்துக்கொடுப்பது.

  4. பாரத நாட்டின் ஏனைய சமுதாயங்களுடன் ஒற்றுமையுடன் சமன்நிலையில் செயல்பட்டு, நாட்டின் பொது முன்னேற்றத்தை குறியாகக்கொண்டு முன்மாதிரியான குடிமக்களாக வாழ்வழி காட்டுவது.

  5. இச்சமுதாயத்தின் தனிப்பட்ட அங்கத்தினர்கள், சமூக அமைப்புகள் ஆகியவர்களின் ஊக்க சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, சமூகத்தின் பொது நன்மைக்காக பயன்படுத்துதல், இதர சமுதாயங்கள், அரசாங்கம் ஆகியவைகள் அளிக்கும் வாய்ப்புக்களையும் தக்கமுறையில் பயன்படுத்திக்கொள்ளுதல்.

  6. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களிலும் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றங்களை நிறுவி நடத்துதல். இந்த மன்றங்களில் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விடுதிவசதிகள் அமைத்துக்கொடுத்தல். இளையோர்களுக்கு கல்வி முன்னேற்றத்திற்காகவும், வேலைவாய்ப்புக்களைப் பெறுவதற்காகவும், பயிற்சி வகுப்புகளை நடத்துதல், உடற்பயிற்சி அளித்தல், புத்தகசாலைகளை வைத்துப்பராமரித்தல், வல்லுநர்களைக்கொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்துதல் ஆகிய பொறுப்புகளை மேற்கொள்ளுதல்.

  7. பொதுப்பாடசாலைகள், தொழிற்கல்விச்சாலைகள், மருத்துவ விடுதிகள், கல்லூரிகள் ஆகியவைகளை ஏற்படுத்துவதும், நடத்துவதும்.

  8. நெசவுத்தொழில் முன்னேற்றத்திற்காக அங்காங்கு பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஆலோசனைக்கூடங்கள் ஏற்படுத்துவதும், நடத்துவதும்.

பொறுப்பாளர்கள்

தலைமை நிர்வாகிகள்

வட்டார நிர்வாகிகள் 140

  1. 1.அந்தியூர் வட்டாரம்
  2. 2.அருப்புக்கோட்டை வட்டாரம்
  3. 3.அவிநாசி வட்டாரம்
  4. 4.ஆயக்கவுண்டன்பாளையம் வட்டாரம்
  5. 5.ஆயக்கவுண்டம்பாளையம் மகளிர் வட்டாரம்
  6. 6.இடுக்கி வட்டாரம்
  7. 7.இராசிபுரம் வட்டாரம்
  8. 8.இராசிபுரம் கல்வி வட்டாரம்
  9. 9.இளம்பிள்ளை வட்டாரம்
  10. 10.ஈரோடு மஞ்சள் வட்டாரம்
  11. 11.உடுமலை வட்டாரம்
  12. 12.உடுமலை புறநகர் வட்டாரம்
  13. 13.காங்கேயம் வட்டாரம்
  14. 14.குரல்குட்டை வட்டாரம்
  15. 15.கும்பகோணம் வட்டாரம்
  16. 16.குத்தம்பள்ளி வட்டாரம்
  17. 17.கொமாரபாளையம் வட்டாரம் 1
  18. 18.கொமாரபாளையம் வட்டாரம் 2
  19. 19.கொமாரபாளையம் கிழக்கு வட்டாரம்
  20. 20.கொமாரபாளையம் ரூரல் வட்டாரம்
  21. 21.கொமாரபாளையம் ஜவுளி வட்டாரம்
  22. 22.கொமாரபாளையம் வேதாந்தபுரம் வட்டாரம்
  23. 23.கொமாரபாளையம் காவேரி வட்டாரம்
  24. 24.கொமாரபாளையம் விட்டலபுரி வட்டாரம்
  25. 25.கொமாரபாளையம் காந்திபுரம் வட்டாரம்
  26. 26.கொமாரபாளையம் எம்.ஜி.ஆர்.நகர் நெசவாளர் வட்டாரம்
  27. 27.கொமாரபாளையம் இளைஞர் வட்டாரம்
  28. 28.கொமாரபாளையம் காவேரி நகர் ஸ்ரீ சக்தி வட்டாரம்
  29. 29.கொமாரபாளையம் வீரகுமாரர்கள் வட்டாரம்
  30. 30.கொமாரபாளையம் ஸ்ரீ காயத்ரீதேவி மகளிர் வட்டாரம்
  31. 31.கொமாரபாளையம் விவேகானந்தர் வட்டாரம்
  32. 32.கொமாரபாளையம் வர்த்தகர் வட்டாரம்
  33. 33.கொமாரபாளையம் கல்வி வட்டாரம்
  34. 34.கொமாரபாளையம் தொழில் நுட்ப தகவல் தொடர்பு வட்டாரம்
  35. 35.கோத்தகிரி வட்டாரம்
  36. 36.கோவை வட்டாரம்
  37. 37.கோவை ஒண்டிப்புதூர் வட்டாரம்
  38. 38.கோவை கிழக்கு வட்டாரம்
  39. 39.கோவை மத்திய வட்டாரம்
  40. 40.கோவை ஸ்ரீ சௌடேஸ்வரி மகளிர் வட்டாரம்
  41. 41.கோவை தெற்கு வட்டாரம்
  42. 42.கோவை மேற்கு வட்டாரம்
  43. 43.கோவை வடக்கு வட்டாரம்
  44. 44.கோவை தெற்கு ரூரல் வட்டாரம்
  45. 45.கோவை மான்செஸ்டர் வட்டாரம்
  46. 46.சிடுவம்பட்டி வட்டாரம்
  47. 47.சிவகாசி தாயில்பட்டி வட்டரம்
  48. 48.செங்கல்பட்டு வட்டாரம்
  49. 49.செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி வட்டாரம்
  50. 50.செம்மாண்டப்பட்டி வட்டாரம்
  51. 51.சென்னை வடபழனி வட்டாரம்
  52. 52.சேலம் கருங்கல்பட்டி வட்டாரம்
  53. 53.சேலம் கருங்கல்பட்டி இளைஞர் வட்டாரம்
  54. 54.சேலம் கருங்கல்பட்டி ஜவுளி வட்டாரம்
  55. 55.சேலம் கருங்கல்பட்டி ஸ்ரீ பாண்டுரங்கன் வட்டாரம்
  56. 56.சேலம் காஸ்வே வட்டாரம்
  57. 57.சேலம் புறநகர் வட்டாரம்
  58. 58.சேலம் மாங்கனி வட்டாரம்
  59. 59.சேலம் செங்கல்பட்டி வட்டாரம்
  60. 60.சேலம் ஸ்ரீ காயத்ரி தேவி வட்டாரம்
  61. 61.சேலம் ஸ்ரீ சௌடேஸ்வரி வட்டாரம்
  62. 62.சேலம் கருங்கல்பட்டி வட்டாரம் 1
  63. 63.சேலம் மாநகர் வட்டாரம்
  64. 64.சேலம் கல்வி வட்டாரம்
  65. 65.சேலம் ரூரல் வட்டாரம்
  66. 66.சேலம் S.V. ராமசாமி நகர் குகை நெசவாளர் காலனி வட்டாரம்
  67. 67.திருச்சி வட்டாரம்
  68. 68.தாராபுரம் வட்டாரம்
  69. 69.திண்டுக்கல் வட்டாரம்
  70. 70.திருப்பூர் வட்டாரம்
  71. 71.திருப்பூர் வடக்கு வட்டாரம்
  72. 72.திருப்பூர் தெற்கு வட்டாரம்
  73. 73.திருப்பூர் அண்ணா நகர் வட்டாரம்
  74. 74.திருப்பூர் குமரானந்தபுரம் வட்டாரம்
  75. 75.திருப்பூர் கைத்தறி வட்டாரம்
  76. 76.திருப்பூர் நெசவாளர் வட்டாரம்
  77. 77.திருப்பூர் பனியன் வட்டாரம்
  78. 78.திருப்பூர் மேட்டங்காடு வட்டாரம்
  79. 79.திருப்பூர் ஜே பி நகர் வட்டாரம்
  80. 80.திருப்பூர் இளங்கோ நகர் வட்டாரம்
  81. 81.திருப்பூர் ஸ்ரீ சௌடேஸ்வரி மகளிர் வட்டாரம்
  82. 82.திருப்பூர் அழகு வீரர்கள் வட்டாரம்
  83. 83.திருப்பூர் மாஸ்கோ நகர் வட்டாரம்
  84. 84.திருப்பூர் சாமுண்டிபுரம் வட்டாரம்
  85. 85.திருப்பூர் S.V. காலனி வட்டாரம்
  86. 86.திருப்பூர் பாண்டியன் நகர் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி வட்டாரம்
  87. 87.திருப்பூர் பாண்டியன் நகர் - இராமலிங்கேஸ்வரர் வட்டாரம்
  88. 88.திருப்பூர் கீதா கஸ்தூரி நகர் வட்டாரம்
  89. 89.திருப்பூர் மேட்டுப்பாளையம் ஸ்ரீ சௌடேஸ்வரி வட்டாரம்
  90. 90.திருப்பூர் மேட்டுப்பாளையம் வட்டாரம்
  91. 91.திருப்பூர் கணபதிபாளையம் வட்டாரம்
  92. 92.தேனி வட்டாரம்
  93. 93.தேனி தெற்கு வட்டாரம்
  94. 94.தேனி வடக்கு வட்டாரம்
  95. 95.நங்கவள்ளி வட்டாரம்
  96. 96.நாமக்கல் கல்லாங்காடு புறநகர் வட்டாரம்
  97. 97.பழனி வட்டாரம்
  98. 98.பழனி இளைஞர் வட்டாரம்
  99. 99.பழனி மகளிர் வட்டாரம்
  100. 100.பள்ளிபாளையம் வட்டாரம்
  101. 101.பள்ளிப்பாளையம் ரூரல் வட்டாரம்
  102. 102.பாண்டிச்சேரி வட்டாரம்
  103. 103.பூளவாடி வட்டாரம்
  104. 104.பெங்களூர் வட்டாரம்
  105. 105.பெங்களூர், சென்ன கேசவ நகர் வட்டாரம்
  106. 106.பெங்களூர், ஹொசா ரோடு, ஜி.கே.லேஅவுட் வட்டாரம்
  107. 107.பெங்களூர், கார்வேபாவி வட்டாரம்
  108. 108.பெங்களூர்,Koramangala(கிருஷ்ணம்ரெட்டி லே-அவுட்)வட்டாரம்
  109. 109.பெதப்பம்பட்டி வட்டாரம்
  110. 110.பொள்ளாச்சி கிழக்கு வட்டாரம்
  111. 111.பொள்ளாச்சி மேற்கு வட்டாரம்
  112. 112.பொள்ளாச்சி நகர வட்டாரம்
  113. 113.பொள்ளாச்சி வடக்கு வட்டாரம்
  114. 114.பொள்ளாச்சி மகளிர் வட்டாரம்
  115. 115.போடி ரெங்கநாதபுரம் ஹரிமனை தாயதிகள் வட்டாரம்
  116. 116.மடத்துக்குளம் வட்டாரம்
  117. 117.மணலி ஜேடர்பாலையம் நெசவாளர் வட்டாரம்
  118. 118.மதுரை வட்டாரம்
  119. 119.மதுரை புறநகர் வட்டாரம்
  120. 120.மேச்சேரி வட்டாரம்
  121. 121.மேச்சேரி சாமராஜ்பேட்டை வட்டாரம்
  122. 122.மேச்சேரி ஜகஜோதி நண்பர்கள் வட்டாரம்
  123. 123.மேட்டூர் வட்டாரம்
  124. 124.வாளவாடி வட்டாரம்
  125. 125.விழுப்புரம் வட்டாரம்
  126. 126.வெள்ளகோவில் வட்டாரம்
  127. 127.வெள்ளகோவில் புறநகர் வட்டாரம்
  128. 128.வெள்ளலூர் வட்டாரம்
  129. 129.வேப்பம்பட்டிபுதூர் ஜவுளி வட்டாரம்
  130. 130.ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி வட்டாரம்
  131. 131.ஜலகண்டாபுரம் குப்பம்பட்டி வட்டாரம்
  132. 132.ஜலகண்டாபுரம் கரட்டாண்டி பட்டி வட்டாரம்
  133. 133.ஜலகண்டாபுரம் பாபி செட்டியூர் வட்டாரம்
  134. 134.ஜலகண்டாபுரம் மலையம்பாளையம் வட்டாரம்
  135. 135.ஜலகண்டாபுரம் மேட்டு தெரு வட்டாரம்
  136. 136.வனவாசி வட்டாரம்
  137. 137.வனவாசி வீரக்குமாரர்கள் வட்டாரம்
  138. 138.தாசப்பக்கவுண்டன் புதூர் வீரகுமாரர்கள் வட்டாரம்
  139. 139.மேட்டுப்பாளையம் வட்டாரம்
  140. 140.சென்னை வட்டாரம்

அறிக்கை

பதிவு பெற்றது · பதிவு எண். 56/1978, வட சென்னை

பெயர்
அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம்
ஆங்கிலப் பெயர்
ALL INDIA DEVANGAR SRI SOWDESWARI SERVICE ASSOCIATION
செயலகம்
வட சென்னை மாவட்ட பதிவாளர் சரகத்திற்குட்பட்ட, சென்னை, ஜார்ஜ் டவுன், இரமணன் தெருவில் 24-ம் எண் கட்டிடம்
அமைக்கப்பட்ட நாள்
18-3-1978
செயல் பரப்பு
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள்
துணை விதிகள்
14-9-1980 அன்று சேலம் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

இணை விதிகள்

  1. இச்சங்கத்தின் பெயர், "அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம்" எனத் தமிழிலும், "ALL INDIA DEVANGAR SRI SOWDESWARI SERVICE ASSOCIATION" என ஆங்கிலத்திலும் வழங்கிவரும்.

  2. அனைத்திந்திய தேவாங்கர் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தின் செயலகம், வடசென்னை மாவட்டப் பதிவாளர் வரையறைக்குட்பட்ட சென்னை ஜார்ஜ் டவுன், வீரப்பா இல்லம், இரமணன் தெரு, 24-ஆம் எண் கட்டிடத்தில் இருந்துவரும். மன்றத்தின் அலுவலக நேரம் காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 3.00 மணி முதல் 8.00 மணி வரையும் ஆகும்.

  3. இந்தச் சங்கம் 18.03.1978-ஆம் நாள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

  4. இந்த மன்றத்தின் நோக்கங்களும், செயல்முறைகளும் அறிக்கையில் (Memorandum) கண்டுள்ளவாறு.

துணை விதிகள்

14-9-1980 அன்று சேலம் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட துணை விதிகள்.

5சொல் விளக்கம்
  1. மன்றம் — என்னும் சொல் ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தை, அதாவது "Sowdeswari Service Association"-ஐக் குறிக்கும்.

  2. பேரவை — என்னும் சொல் மன்றத்தின் உறுப்பினர்கள் இந்த துணை விதிகளின்படி கூடியுள்ள கூட்டத்தைக் குறிக்கும்.

  3. வட்டார அவை — என்னும் சொற்றொடர் சம்பந்தப்பட்ட வட்டாரத்தைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் இத்துணை விதிகளின்படி கூடிய கூட்டத்தைக் குறிக்கும்.

  4. வட்டாரக் குழு — என்னும் சொற்றொடர் வட்டார அவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களும் இத் துணை விதிகளின்படி இயங்கும் குழுவைக் குறிக்கும்.

  5. தலைமைக் குழு — எனும் சொற்றொடர் அனைத்து வட்டாரக் குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள் ஆகியோர்கள் இத்துணை விதிகளின்படி சேர்ந்து இயங்கும் குழுவைக் குறிக்கும்.

  6. நிர்வாக ஆண்டு — என்பது மார்ச் மாதம் 31-ம் நாளுடன் முடியும் முந்தைய 12 மாதங்கள் கொண்ட ஒரு ஆண்டாகும்.

7நிர்வாகம் — பேரவை
  1. வருடாந்திரப் பேரவைக் கூட்டம் ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் ஒருமுறையாவது, நிர்வாக ஆண்டு முடிந்து 3 மாத காலத்திற்குள் தலைமைக் குழுவால் கூட்டப்பட வேண்டும். கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 21 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும். மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 1/3 உறுப்பினர்கள் அல்லது 100 — இவற்றில் எது குறைவோ அவர்கள் வருகை தந்திருக்க வேண்டும்.

  2. இப் பேரவை, தலைமைக் குழு அளிக்கும் மன்றத்தின் ஆண்டு வரவு செலவு கணக்கையும், ஆண்டு அறிக்கையையும் ஆராய்ந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

  3. தலைமைக் குழுவின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்ய சார்ட்டர்ட் அக்கவுன்டெண்ட் ஒருவரை நியமித்து, அவரது ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும்.

7அதுணை விதி மாற்றங்கள்
  1. மன்றத்தின் துணை விதிகளில் (Bye-laws) மாற்றம், சேர்க்கை அல்லது நீக்கம் ஏற்படுத்தும் அதிகாரம் பேரவைக்கு உண்டு.

  2. பேரவைக் கூட்டத்தில் கூடியுள்ள உறுப்பினர்களில் குறைந்தது 2/3 பங்கு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்ப்பின் மூலம் இத் துணை விதிகளுக்கு மாற்றங்கள், சேர்க்கைகள், நீக்கங்கள் ஆகியவைகள் செய்யப்பட வேண்டும்.

  3. துணை விதி திருத்தப் பிரேரணைகள், உறுப்பினர்களிடமிருந்து பேரவைக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்னதாக தலைமைக் குழுவிற்குக் கிடைக்க வேண்டும்.

8வட்டார அவையின் அதிகாரங்கள்
  1. வட்டார அவையானது பேரவையின் ஒரு தொகுதி (Constituency) ஆகும். ஒரு வட்டாரத்தைச் சேர்ந்த உறுப்பினர்களால் ஆகிய வட்டார அவையானது, இத்துணை விதிகளுக்குட்பட்டு வட்டாரக் குழுவைத் தேர்ந்தெடுக்கும்.

  2. வட்டார அவையின் வருடாந்திரக் கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை, நிர்வாக ஆண்டு முடிந்து இரண்டு மாதங்களுக்குள் கூட்டப்பட வேண்டும். கூட்டத்திற்கு 21 நாட்கள் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 30 அங்கத்தினராவது (கோரம்) வந்திருக்க வேண்டும்.

  3. வட்டார அவையின் 1/3 பகுதி உறுப்பினர்களின் எழுத்து மூலம் வேண்டுகோளின்படியும் வட்டார அவை கூட்டப்பட வேண்டும். அவ் வேண்டுகோளில் பரிசீலனைக்குக் கொண்டுவர இருக்கும் விசயங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்; அக் கூட்டத்தில் அவ் விசயங்கள் மட்டுமே ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

  4. விசேச வட்டார அவைக் கூட்டத்தை வட்டாரக் குழு நிர்வாகத்தினர் தேவை எனக் கருதினால், 14 நாள் முன் அறிவிப்பு கொடுத்துக் கூட்டலாம்.

  5. வருடாந்திர வட்டார அவை, வட்டாரக் குழுவின் வரவு செலவுகளையும் நிதிநிலை அறிக்கையையும் ஒவ்வொரு ஆண்டும் பரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்கும்.

  6. வட்டார அவையின் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும், துணை விதிகளுக்குட்பட்டு, வட்டாரக் குழுவின் தேர்தலில் பதவிகளுக்குப் போட்டியிட உரிமை உண்டு.

  7. வட்டாரக் குழுவின் கணக்குகள், வட்டார அவையின் கூட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட சார்ட்டர்ட் அக்கவுன்டெண்ட் ஒருவரால் ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்யப்பட வேண்டும்.

  8. வட்டார அவையால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தக் கணக்காயாளரையும், எந்த வட்டாரக் குழு உறுப்பினரையும், வட்டார அவை எந்த நேரத்திலும் பெரும்பான்மையான வாக்குகளால் அப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நீக்கி வைக்க உரிமையுண்டு.

  9. மன்றத்தின் எந்த ஒரு உறுப்பினரது செயல் அல்லது நடவடிக்கை மன்றத்தின் நோக்கங்களுக்குப் பாதகம் விளைவிக்கும் வண்ணமோ, அல்லது இந்த விதிகளைப் புறக்கணித்து மீறியதாகவோ வட்டாரக் குழு கருதினால், அத்தகைய உறுப்பினரிடமிருந்து தகுந்த சமாதானம் கோர வட்டாரக் குழுவிற்கு அதிகாரம் உண்டு. சமாதானம் திருப்தி அளிப்பதாக இல்லாவிட்டால், தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக நீக்கிவிடச் சிபாரிசு செய்து வட்டார அவைக் கூட்டத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். வருகை தந்துள்ள உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 2/3 பேரின் பெரும்பான்மைத் தீர்மானப்படியே நீக்கம் செய்யப்பட வேண்டும். நீக்கப்பட்ட உறுப்பினர் 30 தினங்களுக்குள் பேரவைக்கு மேல்முறையீடு (appeal) செய்து கொள்ளலாம். பேரவையின் தீர்ப்பே இறுதியானது.

10வட்டாரக் குழுக்களின் பொறுப்புக்களும், அதிகாரங்களும்
  1. வட்டாரக் குழுவானது அந்த வட்டாரத்தில் மன்றத்தின் பணிகளைக் கவனித்து வர வேண்டும். வட்டாரக் குழு மாதம் ஒரு முறையாவது தலைவரால் கூட்டப்பட வேண்டும். இக் குழுவின் கூட்டம் நடைபெற இதற்கு 3 நாட்கள் முன் அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும். கூட்டத்திற்கு குறைந்தது 5 பேராவது வருகை தந்திருக்க வேண்டும்.

  2. மன்றத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்து தலைமைக் குழுவிற்குச் சிபாரிசு செய்வது வட்டாரக் குழுவின் பொறுப்பாகும்.

  3. மன்றத்தின் நோக்கங்களையும், கொள்கைகளையும், சாதனைகளையும் பரப்புதலும், உறுப்பினர்களுக்குத் தகுந்த முறையில் விளக்குதலும் வட்டாரக் குழுவின் பொறுப்பாகும்.

  4. வட்டார அங்கத்தினர்களின் நலனுக்கும், ஒற்றுமைக்கும், மற்றும் வட்டார மக்களின் பொது நன்மைக்கும் உகந்த திட்டங்களை வகுத்து தலைமைக் குழுவில் தெரிவித்து நிறைவேற்றி வைப்பது வட்டாரக் குழுவின் பொறுப்பாகும்.

  5. வட்டாரக் குழு தனது திட்டங்களுக்குத் தேவையான பற்றுக்குறை நிதி உதவியை தலைமைக் குழுவிடம் கோரிப் பெறலாம்.

  6. எந்தக் காரணத்தினாலாவது ஒரு வட்டாரக் குழு உறுப்பினர் பதவி காலி ஆகிவிட்டால், அந்தப் பொறுப்பிற்கு வட்டார அவையிலிருந்து ஒரு அங்கத்தினரை நியமித்துக் கொள்ளும் உரிமை வட்டாரக் குழுவிற்கு உண்டு. நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அந்த வட்டாரக் குழுவின் பதவிக்காலம் வரை பதவியில் இருப்பர்.

11வட்டாரக் குழு நிர்வாகிகளின் பொறுப்புகள்
  1. தலைவர் — வட்டாரத்தின் முழு நிர்வாகத்திற்கும் வட்டாரக் குழுவின் தலைவரே பொறுப்பாவார்.

  2. செயலாளர் — ஒவ்வொரு வட்டாரக் குழுவின் அன்றாட நிர்வாகம் அதன் செயலாளரின் பொறுப்பில் இருந்து வரும். கடிதப் போக்குவரத்திற்கும் இவரே பொறுப்பு. தலைவரின் ஆலோசனைக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு இவர் செயல் ஆற்ற வேண்டும்.

  3. பொருளாளர் — வட்டாரக் குழுவிற்குக் கிடைக்கும் அனைத்து நிதிகளும் வட்டாரப் பொருளாளர் பொறுப்பில் இருக்க வேண்டும். அவைகளுக்குச் சரியான கணக்குகள் வைத்து வருவது அவரது பொறுப்பு.

  4. துணைத் தலைவர்கள் — தலைவர் இல்லாத நேரங்களில் நிர்வாகத்திற்காக, தலைவரின் பணியை ஆற்ற வேண்டும்.

  5. துணைச் செயலாளர்கள் — செயலாளரின் பணிகளில், அவருடன் ஒத்துழைக்க வேண்டும். அவர் இல்லாத நேரங்களில் அவரது பொறுப்புகளை ஏற்று நடத்த வேண்டும்.

12வட்டாரக் குழுவின் நிதி நிர்வாகம்
  1. வட்டாரக் குழுவிற்குத் தலைமைக் குழுவினால் ஒதுக்கப்படும் விகிதாச்சார நிதிகள் மற்றும் தலைமைக் குழுவிலிருந்து அவ்வப்போது அளிக்கப்படும் சிறப்பு உதவித்தொகைகள் ஆகியவை கொண்ட நிதி, அந்தந்த வட்டாரத் தலைமையகத்தில் உள்ள ஒரு ஷெடியூல்டு வங்கியில் தமிழில் "ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றம் … வட்டாரம்" என்றும், ஆங்கிலத்தில் "SRI SOWDESWARI SERVICE ASSOCIATION … REGION" என்றும் பெயரில் கணக்கில் இருந்து வர வேண்டும்.

  2. வட்டாரக் குழுவின் திட்டங்களுக்காகக் குறிப்பிட்ட காரியத்திற்கென வசூலிக்கப்படும் நன்கொடையை, வட்டாரக் குழு தன் சொந்த நிதியாகவே வைத்துக் கொள்ளலாம். ஆனால், எந்தக் காரியத்திற்காக அந்த நிதி உருவாக்கப்பட்டதோ அந்தக் காரியத்திற்காக அது செலவிடப்பட வேண்டும். வங்கிக் கணக்கை பொருளாளரும், தலைவர் அல்லது செயலாளர் ஆகிய இருவரில் யாராவது ஒருவரும் சேர்ந்து நிர்வகித்து வர வேண்டும். செலவினங்கள் அனைத்தும் வட்டாரக் குழுவின் அங்கீகாரத்தின் பேரிலேயே செய்யப்பட வேண்டும்.

  3. பொருளாளர் தன் கையிருப்பில் ரூ. 200/-க்கு மேற்பட்ட தொகையை எந்த சமயத்திலும் வைத்திருக்கக் கூடாது. ரூ. 200/-க்கு மேற்பட்ட நிதி உடனடியாக வட்டாரக் குழுவின் வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்பட வேண்டும்.

துணை விதிகள் 13, 14, 15 நீக்கப்பட்டது.

16தலைமைக் குழுவின் அமைப்பு — பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள்
  1. தலைமைக் குழுவின் தலைவர், பொதுச் செயலாளர், அமைப்புச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய நான்கு பொறுப்பாளர்களும், இரண்டாண்டிற்கு ஒரு முறை பேரவையினால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  2. மற்றும் எல்லா வட்டாரக் குழுக்களின் தலைவர்கள் தலைமைக் குழுவில் துணைத் தலைவர்களாகவும், செயலாளர்கள் இணைச் செயலாளர்களாகவும், பொருளாளர்கள் அங்கத்தினர்களாகவும் இடம் பெறுவார்.

  3. தலைமைக் குழுவில் ஏற்படுகின்ற எந்தக் காலி இடத்தையும், தலைமைக் குழு தற்காலிகமாக அடுத்து பேரவைக் கூட்டம் நடக்கும் வரை நிரப்பிக் கொள்ளலாம்.

  4. தலைமைக் குழுக் கூட்டத்திற்குக் குறைந்தபட்சம் 7 பேர்களாவது வருகை புரிந்திருக்க வேண்டும்.

  5. தலைமைக் குழு ஒவ்வொரு பதவிக் காலத்தின் இறுதிக்குள்ளும் தலைமைக் குழு மற்றும் வட்டாரக் குழுவின் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.

  6. இத்துணை விதிகளில் குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கும் அதிகாரங்கள் போக மிகுதி அதிகாரங்கள் (residuary and inherent powers) தலைமைக் குழுவைச் சார்ந்ததாகும்.

  7. மன்றத்திற்கு நன்கொடைகளை வசூலிக்கவும், அரசாங்கத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெறவும் மன்றத்தின் தலைமைக் குழுவிற்கும், அந்தந்த வட்டாரக் குழுவிற்கும் அதிகாரம் உண்டு. வட்டாரக் குழுக்கள் வசூலிக்கும் நன்கொடை விபரங்கள் அவ்வப்போது தலைமைக் குழுவிற்கு எழுத்துமூலமாகத் தெரியப்படுத்த வேண்டும்.

  8. மன்றத்திற்காகக் கிரயம் பெறும் சொத்துக்கள் மற்றும் தானமாகப் பெறும் சொத்துக்கள் அல்லது ஈடாகப் பெறும் சொத்துக்கள் அனைத்தும் தலைமைக் குழுவின் பெயரில் இருக்கும்.

  9. 1975-ம் வருடத்திய சங்கங்கள் பதிவுச் சட்டம் மற்றும் விதிகளின்படி, பதிவாளருக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டிய எல்லா தஸ்தாவேஜுகளையும் தயாரித்து அவரிடம் தாக்கல் செய்வது இக் குழுவின் பொறுப்பாகும்.

  10. மேற்படி சட்டப் பிரிவு 16-ன்படி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுதி பெற்ற ஒரு தணிக்கையாளரை, மன்றத்தின் கணக்கைத் தணிக்கை செய்யும் பொருட்டு இக் குழு நியமித்துக் கொள்ள வேண்டும்.

  11. தலைமைக் குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள்.

17தலைமைக் குழுக் கூட்டங்கள்
  1. தலைவர், தலைவரில்லாத நேரங்களில் ஒரு துணைத் தலைவர் ஆகியோரால் நிர்ணயிக்கப்படுகின்ற தேதியில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது தலைமைக் குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். தலைமைக் குழுவின் அவசரக் கூட்டங்கள், தலைவராலோ அல்லது தலைவர் இல்லாத சந்தர்ப்பங்களில் துணைத் தலைவராலோ பிரத்தியேகக் காரணங்களுக்காகக் கூட்டப்படலாம். மேலும் தலைமைக் குழுவின் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 5 பேர்கள் எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்தால் அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். கூட்டப்படுவதற்கான பிரத்தியேக காரணங்கள் அவர்களின் எழுத்து மூல வேண்டுகோளில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

  2. ஒவ்வொரு தலைமைக் குழு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உண்டு. வாக்கெடுப்பின்போது இரு பக்கமும் சமமான வாக்குகளே இருப்பின், முடிவு திருவுளச்சீட்டு மூலமாக எடுக்கப்பட வேண்டும்.

18தலைமைக் குழுவினரின் செயல்முறைகள்
  1. இம் மன்றத்தின் அனைத்து நோக்கங்களையும் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும், அதிகாரமும் தலைமைக் குழுவினருக்கு உண்டு. தலைமைக் குழுவினரின் எழுத்து மூலமான தீர்மானங்களின் அடிப்படையில் மன்றத்தின் நோக்கங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். அவசரத்தை முன்னிட்டு தீர்மானங்கள் சுற்றுமுறையிலும் (Circulation) நிறைவேற்றப்படலாம். சுற்றுமுறைத் தீர்மானங்கள் எல்லா அங்கத்தினர்களுக்கும் அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். அத்தகைய சுற்றுமுறைத் தீர்மானங்கள் தலைமைக் குழுவின் அடுத்த கூட்டத்தில் ஒப்புதல் செய்யப்பட வேண்டும்.

  2. மன்றத்தின் நோக்கங்களைச் செயல்படுத்தும் பொருட்டு, தேவையான அளவிற்கு நடைமுறை விதிகளை இக் குழு இயற்றிக் கொள்ள வேண்டும். தலைமைக் குழு மன்றத்தின் நோக்கங்களைச் செயல்படுத்துவதற்காக, தகுந்த துணைக் குழுக்களை, அரசாங்கச் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் முரண்பாடாக இல்லாத வகையில் அவ்வப்போது அமைத்துக் கொள்ள வேண்டும்.

  3. தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் — தலைவர், தலைவரில்லாத நேரங்களில் துணைத் தலைவர் இக் குழுவின் எல்லாக் கூட்டங்களுக்கும் தலைமையேற்பார். தலைவரும், துணைத் தலைவர்களும் இல்லாதபோது வருகை தந்துள்ள உறுப்பினர்களிடையே கூட்டத் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மன்றத்தின் பொது நிர்வாகத்திற்கு தலைவரே பொறுப்பாளர்.

  4. பொதுச் செயலாளர் — பொதுச் செயலாளர், தலைமைக் குழுவின் அன்றாட நிர்வாகத்தை தலைமைக் குழுவின் தீர்மானங்களுக்கும், தலைவரின் கட்டுப்பாட்டிற்கும் ஆலோசனைக்கும் உட்பட்டு செயல்படுத்த வேண்டும். மன்றத்தின் கடிதப் போக்குவரத்திற்கு இவரே பொறுப்பு.

  5. அமைப்புச் செயலாளர் — தலைவரின் ஆலோசனைப்படி, மன்றத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்திச் செயல்படுவது இவரது பொறுப்பாகும்.

  6. இணைச் செயலாளர்கள் — பொதுச் செயலாளர் அவ்வப்போது அளிக்கும் பொறுப்புகளை ஏற்று நிறைவேற்றி அவருக்கு உதவியாக இருந்து வர வேண்டும். ஒவ்வொரு இணைச் செயலாளரும் தான் சார்ந்த வட்டாரத்தின் முன்னேற்ற வேலைகளுக்கு பொதுச் செயலாளருக்கு நேரடியாகப் பொறுப்பானவராவார்.

  7. பொருளாளர் — பொருளாளர் தலைமைக் குழுவின் எல்லா வரவு, செலவினங்களுக்கும், பணப் பாதுகாப்பிற்கும் பொறுப்பாவார். இவர் தலைமைக் குழுவின் தீர்மானங்களுக்கேற்ப மன்றத்தின் செலவினங்களுக்குத் தேவையான நிதியை அவ்வப்போது கொடுத்து வர வேண்டும். வரவு செலவினங்களுக்குச் சரியான கணக்குகளைப் பராமரித்து ஒவ்வொரு தலைமைக் குழுக் கூட்டங்களிலும் தாக்கல் செய்ய வேண்டும். தலைமைக் குழுவின் வரவினங்களுக்கு இரசீது அளிக்கும் பொறுப்பு இவரைச் சார்ந்ததாகும்.

19தலைமைக் குழு நிதி நிர்வாகம்
  1. மன்றத்தின் பொது நிதி கீழ்க்கண்ட இனங்களிலிருந்து உருவாக்கப்படும்: தனி நபர் ஆயுள் சந்தா; நன்கொடை அங்கத்தினரின் சந்தாவும் நன்கொடையும்; சங்கங்கள் அங்கத்தினர்கள் சந்தா; நன்கொடைகள்; இதர வரவினங்கள்.

  2. மன்றத்தின் பொது நிதியானது சென்னையில் ஒரு ஷெடியூல்டு பாங்கில் இட்டு வைக்கப்பட வேண்டும்.

  3. தலைமைக் குழுவின் பொருளாளருடன் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் சேர்ந்து கையொப்பமிட்ட காசோலைகளின் மூலமாக வங்கிக் கணக்கை நிர்வகித்து வர வேண்டும்.

  4. மன்றத்தின் நோக்கங்களை ஒட்டிய தலைமைக் குழுவின் தீர்மானத்தின் பேரில் மட்டுமே, இந்த நிதியானது உபயோகிக்கப்பட வேண்டும்.

  5. பொது நிதியை தலைமைக் குழு மன்றத்தின் நலன் கருதி தகுந்த வழிகளில் முதலீடு செய்யலாம் அல்லது விதி 4 (5)-க்கு உட்பட்டு செலவழிக்கலாம்.

  6. நன்கொடை அங்கத்தினர்களின் மூலமாகக் கிடைக்கும் நிதியும், நன்கொடைகள் இதர வருமானங்களின் மூலம் கிடைக்கும் நிதியும் விதி 12-(1)-க்கு உட்பட்டு தலைமைக் குழுவின் உத்தரவுப்படி, மற்ற நோக்கங்களை நிறைவேற்ற பயன்படுத்தப்பட வேண்டும்.

  7. பொது நிதியிலிருந்து ரூ. 200/- அன்றாட செலவுகளுக்காகப் பொருளாளர் கையிருப்பில் வைத்துக் கொள்ளலாம்.

தேர்தல்தேர்தல் விதிகள்
  1. துணை விதி 17-6-ல் கூறப்பட்டுள்ள பொறுப்புகளுக்கான தேர்தல், அதற்காகக் கூட்டப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில், தேர்தல் ஆணையாளரால் நடத்தி வைக்கப்படும்.

  2. தலைமைக் குழுவால் நிர்ணயிக்கப்படும் நாள் வரை சேர்க்கப்படும் உறுப்பினர்களே வேட்பாளராகப் போட்டியிடவும் வாக்களிக்கவும் தகுதி பெற்றவர்களாவர்.

  3. சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்களின் இறுதிப் பட்டியலை, தேர்தல் ஆணையாளர் தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்னதாக தலைமை அலுவலகம், வட்டாரக் குழு அலுவலகங்கள் ஆகியவற்றில் பொது உறுப்பினர்கள் பார்வைக்கு வைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.

  4. பட்டியலைப் பற்றிய விளக்கங்கள், சந்தேகங்கள் ஆகியன குறித்து, வட்டார அவைச் செயலாளர் மூலம் அல்லது தபால் மூலம் அல்லது நேரடியாக தேர்தல் ஆணையாளருக்கு தேர்தல் நாளுக்கு 7 தினங்களுக்கு முன்னதாக எழுத்து மூலம் தெரிவித்திட வேண்டும்.

  5. துணை விதி 16-ல் கண்டுள்ள பொறுப்புகளுக்கு தேர்தலை, தேர்தல் ஆணையாளர் கை தூக்குதல் அல்லது இரகசிய வாக்கெடுப்பு முறையின் மூலம் நடத்தி வைப்பார்.

  6. தகுதியுள்ள உறுப்பினர் ஒன்றிற்கோ அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்புகளுக்கோ வேட்பு மனுவினை தபால் மூலம் அல்லது நேரில் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்ட இடத்தில் தாக்கல் செய்திடலாம்.

  7. போட்டியிலிருந்து விலகிட விரும்புபவர்கள் எழுத்து மூலம் தேர்தல் ஆணையாளர் குறிப்பிடும் இடத்தில், நேரத்தில் கொடுத்திட வேண்டும்.

  8. போட்டி இருந்தால், வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசையில் எழுதப்படும்.

  9. அதிக வாக்குகள் பெற்றவரே தேர்ந்தெடுக்கப்பட்டவராக அறிவிக்கப்படுவார். சம வாக்குகளாக இருப்பின் திருவுளச் சீட்டு முறை பின்பற்றப்படும்.

  10. பொறுப்பாளர்கள் தேர்தல் முடிவுகள் முறையாக அறிவித்தபின், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், கூட்டத்திற்குத் தலைமை ஏற்று கூட்டத்தினை நடத்தி வைப்பார்.

தேர்தல் ஆணையாளர்: வட்டாரக் குழு மற்றும் தலைமைச் செயற்குழு ஆகியவற்றின் தேர்தல்களை நடத்தி வைத்திட தலைமைக் குழு தேர்தல் ஆணையாளர்களை நியமிக்கும். தேர்தல் ஆணையாளருக்கு உதவி செய்திட தேவையான உதவியாளர்களை ஆணையாளரே நியமித்துக் கொள்வார். தேர்தல் சம்பந்தமாக எழும் எல்லா பிரச்சனைகள் மீதும் தேர்தல் ஆணையாளரின் முடிவே இறுதியானது.

அமைப்பு

நாடு முழுவதும் பரவியுள்ள மன்ற அமைப்பு

வட்டாரங்கள்
140
கிளைகள்
590+
உறுப்பினர்கள்
49,000+

ஒவ்வொரு வட்டாரமும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளால் நடத்தப்படுகிறது.

வட்டாரக் குழுவின் அமைப்பு

ஒவ்வொரு வட்டாரக் குழுவும் பதினைந்து பேரைக் கொண்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வட்டார அவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

தலைவர்1
துணைத் தலைவர்கள்2
செயலாளர்1
துணைச் செயலாளர்கள்2
பொருளாளர்1
உறுப்பினர்கள்4
வட்டாரக்குழு நியமன உறுப்பினர்கள்2
தலைமைக்குழு நியமன உறுப்பினர்கள்2
மொத்தம்15

அக்டோபர் 4 அன்று தொடங்கப்பட்ட திட்டங்கள்

  • 1மன்ற திருமண சேவை

    மன்ற உறுப்பினர் குடும்பங்களின் திருமண விவரங்கள், சரிபார்த்த பின்னரே காட்டப்படும். உறுப்பினர்களுக்கு இலவசம், தரகர் இல்லை. பெற்றோர் தங்கள் கைபேசியிலேயே சமூகத்துக்குள் வரன் தேடலாம்.

    திறக்கவும்
  • 2மன்ற Instagram

    மன்றத்தின் அதிகாரப்பூர்வ Instagram பக்கம். இளைஞர்களுக்காக நிகழ்வுகள், சாதனையாளர்கள், நம் பாரம்பரியம் படங்களாகவும் சிறு காணொளிகளாகவும். தலைமை அலுவலகம் நடத்துகிறது; ஒவ்வொரு வட்டாரத்தின் சமூக ஊடகப் பிரதிநிதியும் செய்திகளை அனுப்புவார்.

    திறக்கவும்
  • 3மன்ற Facebook

    மன்றத்தின் அதிகாரப்பூர்வ Facebook பக்கம். குடும்பங்களும் பெரியோர்களும் மன்றச் செய்திகள், நிகழ்வுகள், உறுப்பினர் கதைகளைப் பார்க்கலாம். தலைமை அலுவலகம் நடத்துகிறது; ஒவ்வொரு வட்டாரத்தின் சமூக ஊடகப் பிரதிநிதியும் செய்திகளை அனுப்புவார்.

    திறக்கவும்
  • 4மன்ற YouTube

    மன்றத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனல். முழு உரைகள், நிகழ்வுகள், நம் பண்பாடு மற்றும் பாரம்பரியக் கதைகள். எங்கிருந்தும் யாரும் மீண்டும் பார்க்கலாம்.

    திறக்கவும்
  • 5தேவாங்க தொழில்முனைவோர்

    தொழில் தொடங்குபவர்கள், தொழிலை வளர்ப்பவர்கள், பிறருக்குத் துணை நிற்கும் தொழிலதிபர்கள் அனைவருக்கும். தேவாங்கத் தொழிலதிபர்களின் வழிகாட்டல், தொழில் வளர்ப்பு மையத்தில் இடம், முதலீட்டு அறிமுகங்கள், முதல் வாடிக்கையாளர்கள் கிடைக்கும். பதிலுக்கு, தேவாங்கர்களுக்கு முதலில் வேலை, மாணவர்களுக்குப் பயிற்சி வாய்ப்பு, அடுத்த தொழில்முனைவோருக்கு வழிகாட்டல்.

    திறக்கவும்
  • 6தேவாங்க மருத்துவ உதவி மையம்

    தேவாங்க மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் தன்னார்வமாக உதவுகிறார்கள். அவசரமில்லாத உடல்நலக் கேள்விகளைச் செயலியில் கேட்கலாம் அல்லது திரும்ப அழைக்கச் சொல்லலாம். பதில், இரண்டாவது கருத்து, சரியான மருத்துவமனை அல்லது மருத்துவர், குறைந்த செலவில் சிகிச்சை பெற உதவி கிடைக்கும்.

    திறக்கவும்
  • 7மன்றச் செயல்பாடுகள் இணையத்தில்

    தலைமை அலுவலக அறிவிப்புகள், வட்டாரச் செய்திகள், கூட்டக் குறிப்புகள், கணக்குகள் அனைத்தும் செயலியில். ஒவ்வொரு உறுப்பினரும் ஒரே செய்தியை ஒரே நேரத்தில் அறிவார்; மன்றம் என்ன செய்கிறது, என்ன முடிவு எடுக்கிறது என்று பார்த்து பங்கேற்கலாம்.

    திறக்கவும்
  • 8Devanga Plus

    மன்றத்தின் உறுப்பினர் செயலி. எல்லா சேவைகளும் ஒரே இடத்தில்; மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், காப்பீடு மற்றும் நிதி நிறுவனங்களில் உறுப்பினர் சலுகை விலை. உறுப்பினராக இருப்பது உங்களுக்குத் திருப்பித் தரும்.

    திறக்கவும்
  • 9நெசவாளர் சந்தைப்படுத்தல் மையம்

    கைத்தறி நெசவாளர்கள் தேவாங்கர் பிராண்டில் விற்கலாம். குழு தரத்தைச் சரிபார்த்து முத்திரை இடும்; வடிவமைப்பு, பொதியிடல், இணைய விற்பனை, கண்காட்சிகளில் மையம் உதவும். சமூகக் குடும்பங்கள், இந்தியா முழுவதும் உள்ள வாங்குபவர்கள், மொத்த மற்றும் ஏற்றுமதி வாங்குபவர்களை நெசவாளர்கள் அடையலாம்.

    திறக்கவும்
  • 10நெசவாளர் புத்தாக்க மையம்

    புதிய வடிவமைப்புகள், மேம்பட்ட நெசவுத் தொழில்நுட்பம், அவற்றைப் பயன்படுத்த நெசவாளர்களுக்குப் பயிற்சி. JKKN ஆய்வாளர்கள், அரசு கைத்தறித் துறை, நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து செயல்படும். நெசவாளர்களுக்குக் கூடுதல் வருமானமும் அவர்களுக்கான அரசுத் திட்டங்களும் கிடைக்கும்.

    திறக்கவும்
  • 11தொழில் வழிகாட்டல் உதவி மையம்

    தேவாங்கத் தொழில் வல்லுநர்கள், ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற ஆலோசகர்களிடமிருந்து இலவச வழிகாட்டல்: 10, 12-ஆம் வகுப்புக்குப் பின் படிப்பு, போட்டித் தேர்வுகள், உதவித்தொகை, வேலை. செயலியில் முன்பதிவு செய்யலாம், திரும்ப அழைக்கச் சொல்லலாம், அல்லது உங்கள் வட்டார வழிகாட்டல் அமர்வில் கலந்துகொள்ளலாம்.

    திறக்கவும்
  • 12தங்குமிடக் கையேடு

    சமூக மண்டபங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகள், கோயில் அறைகள், உறுப்பினர் சலுகை விலையில். மாணவர்கள், பணியாளர்கள், யாத்ரீகர்கள், விழாவுக்கு வரும் குடும்பங்கள் நம்பிக்கையான இடத்தில் தங்கலாம்.

    திறக்கவும்
  • 13கல்வி நிறுவனக் கையேடு

    பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள், திறன் பயிற்சி நிறுவனங்கள்; தேவாங்கர் நடத்துபவை முதலில். உறுப்பினர் குழந்தைகளுக்குக் கட்டணச் சலுகை, சேர்க்கை உதவி, உதவித்தொகை செய்திகள் கிடைக்கும்.

    திறக்கவும்
  • 14இளைஞர் இயக்கம்

    18 முதல் 35 வயதுடைய இன்னும் பல இளைஞர்களை மன்றத்தில் இணைக்கும் இயக்கம். இளைஞர்கள் தங்கள் வட்டாரத்தில் தன்னார்வமாகப் பணியாற்றுவார்கள், பெரியோருக்குச் செயலியைப் பயன்படுத்த உதவுவார்கள், விளையாட்டு, கலை நிகழ்வுகள், சேவைப் பணிகளை நடத்துவார்கள்; சமூகத்தின் அடுத்த தலைவர்களாக வளர்வார்கள்.

  • 15கோயில் மீட்புக் குழு

    இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தேவாங்கக் கோயில்களைச் சட்டப்படி சமூகத்திடம் மீட்கப் பணியாற்றும் குழு. நம் உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களைச் சேகரித்து, ஒவ்வொரு கோயிலின் முன்னேற்றத்தையும் வெளிப்படையாகக் காட்டுகிறது. உறுப்பினர்கள் பழைய ஆவணங்களைப் பகிரலாம், ஒரு கோயிலைப் பற்றித் தெரிவிக்கலாம், நன்கொடை அளிக்கலாம் அல்லது தன்னார்வமாக உதவலாம்.

  • 16சட்ட உதவி சேவை

    மன்றத்தின் சட்டப் பிரிவு, தேவாங்க வழக்கறிஞர்கள் குழு. சமூகம் மற்றும் மன்றத்தின் சட்ட விஷயங்களைக் கையாளும், வழக்கறிஞர் வைக்க இயலாத உறுப்பினர்களுக்கு இலவச உதவி அளிக்கும், காவல் நிலையத்தில் உதவி தேவைப்படும் உறுப்பினருக்கு உடனடியாக உதவும். சொத்து, குடும்பம், தொழில், அரசு விஷயங்களுக்குச் சரிபார்க்கப்பட்ட தேவாங்க வழக்கறிஞரையும் கண்டறியலாம்; முதல் ஆலோசனை இலவசம், கட்டணம் குறைவு.

    திறக்கவும்
  • 17அரசியல் பிரிவு

    எந்தக் கட்சியையும் சாராத, எல்லா மன்ற உறுப்பினர்களுக்கும் திறந்த பிரிவு. சமூகத்தின் தேவைகளையும் கோரிக்கைகளையும் அரசிடம் கொண்டு செல்லும், தேர்தலில் நிற்கும் தேவாங்கர்களுக்கு ஆதரவளிக்கும், உறுப்பினர்கள் வாக்காளராகப் பதிவு செய்து வாக்களிக்க உதவும்.

  • 18மன்ற அலுவலகம்

    மன்றத் தலைமை அலுவலகம்: உறுப்பினர் சேர்க்கை மற்றும் அடையாள அட்டை, சமூகக் கடிதங்கள் மற்றும் சான்றுகள், கோரிக்கைகள் மற்றும் புகார்கள், நிர்வாகிகளைச் சந்திக்க. நேரில் வரலாம், அழைக்கலாம், WhatsApp-ல் செய்தி அனுப்பலாம், அல்லது செயலி வழியாகத் தொடர்புகொள்ளலாம்.

    திறக்கவும்
  • 19மன்ற இணையதளம்

    மன்றத்தின் பொது இணையதளம்: உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசு மற்றும் கூட்டாளிகள், தொலைவில் வாழும் தேவாங்கர்களுக்காக. நம் வரலாறு, பாரம்பரியம், மன்றத் தலைமை மற்றும் அமைப்பு, திட்டங்கள், சமீபச் செய்திகள், உறுப்பினராவது அல்லது நன்கொடை அளிப்பது எப்படி என்பதைச் சொல்கிறது.

    திறக்கவும்
  • 20இணைய வழி நன்கொடை

    இந்தியாவிலோ வெளிநாட்டிலோ உள்ள யாரும் மன்றப் பொது நிதி, விரும்பிய திட்டம், மாணவர் உதவித்தொகை, அவசர நிவாரணம் ஆகியவற்றுக்கு நன்கொடை அளிக்கலாம். ஒவ்வொரு நன்கொடைக்கும் ரசீது; பணம் எப்படிச் செலவானது என்று உறுப்பினர்கள் பார்க்கலாம்; விரும்பினால் நன்கொடையாளர் பெயருடன் நன்றி தெரிவிக்கப்படும்.

    திறக்கவும்
  • 21இணைய வழி உறுப்பினர் சேர்க்கை

    18 வயதுக்கு மேற்பட்ட எந்தத் தேவாங்கரும் கைபேசியிலேயே மன்றத்தில் சேர்ந்து, தன் விண்ணப்பத்தின் நிலையைப் படிப்படியாகப் பார்க்கலாம். உறுப்பினர்களுக்குத் திருமண சேவை, சலுகைகள், உதவி மையங்கள் உட்பட எல்லா சேவைகளும்; ஒரே ஆண்டில் 5 லட்சம் உறுப்பினர்கள் என்பது நம் இலக்கு.

    திறக்கவும்
  • 22உறுப்பினர் கையேடு

    மன்றத்தின் சரிபார்க்கப்பட்ட உறுப்பினர் பதிவேடு, உள்நுழைந்த உறுப்பினர்களுக்கு மட்டும். பெயர், வட்டாரம், கிளை, தொழில் மூலம் சக தேவாங்கர்களைக் கண்டறியலாம்; அருகில் உள்ள உறுப்பினர்களை அறியலாம். அந்த நபர் ஒப்புக்கொண்டால் மட்டுமே தொலைபேசி எண் காட்டப்படும்.

    திறக்கவும்
  • 23நாம் தேவாங்கர்

    ஒவ்வொரு தேவாங்கக் குடும்பமும் கணக்கிடப்படுகிறது: எத்தனை பேர், வயது, படிப்பு, வேலை, வசிக்கும் இடம். குடும்பமே அல்லது வட்டாரத் தன்னார்வலர் பதிவு செய்யலாம். உண்மையான எண்ணிக்கையுடன் மன்றம் தேவையான இடத்தில் உதவியைத் திட்டமிட்டு, அரசிடமும் ஒவ்வொரு தொகுதியிலும் சமூகத்துக்காகப் பேச முடியும்.

    திறக்கவும்
  • 24உறுப்பினர் சலுகைகள்

    சரிபார்க்கப்பட்ட மன்ற உறுப்பினர்களுக்கு நிறுவனங்கள் தரும் தள்ளுபடிகள், செயலியில் பட்டியலாக. உங்கள் டிஜிட்டல் உறுப்பினர் அட்டையைக் காட்டுங்கள் அல்லது கடையில் QR-ஐ ஸ்கேன் செய்யச் சொல்லுங்கள்; உங்கள் குடும்பம் வழக்கமாக வாங்குவதிலேயே சேமியுங்கள்.

    திறக்கவும்
  • 25வணிகக் கையேடு

    தேவாங்கர்களுக்குச் சொந்தமான தொழில்கள், இலவசமாகப் பட்டியலிடப்பட்டு குழுவால் சரிபார்க்கப்பட்டவை; உறுப்பினர்களுக்குச் சலுகை தரும் நட்புத் தொழில்களும் உண்டு. முதலில் தேவாங்கரிடம் வாங்குங்கள்: நம் தொழில்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள், ஒருவரோடொருவர் வணிகம் செய்வார்கள், பணம் சமூகத்துக்குள்ளேயே இருக்கும்.

    திறக்கவும்
  • 26நிகழ்வுகள் கையேடு

    மன்றக் கூட்டங்கள், சௌடேஸ்வரி விழாக்கள், கோயில் நிகழ்வுகள், முகாம்கள், உறுப்பினர்கள் பகிரும் நிகழ்வுகள், அருகிலும் தொலைவிலும். வருவதாகத் தெரிவிக்கலாம், நினைவூட்டல் பெறலாம், நிகழ்விடத்தில் QR மூலம் வருகையைப் பதிவு செய்யலாம்.

    திறக்கவும்
  • 27வேலைவாய்ப்புக் கையேடு

    தேவாங்கத் தொழில்கள், சரிபார்க்கப்பட்ட நிறுவனங்கள், உறுப்பினர்கள் அறிந்த வேலை வாய்ப்புகள்: புதியவர்கள், அனுபவம் உள்ளவர்கள், திறன் தொழிலாளர்கள், பகுதிநேர மற்றும் வீட்டிலிருந்து வேலை. வேலை தேடுபவர்களும் தங்கள் விவரத்தைப் பதிவிடலாம், நிறுவனங்கள் அவர்களைக் கண்டறியும்.

    திறக்கவும்
  • 28தேவாங்க செல்வாக்காளர் வலையமைப்பு

    தேவாங்கப் படைப்பாளர்கள், பிரபலங்கள், ஊடகவியலாளர்கள், மதிப்புமிக்க உள்ளூர் குரல்கள்: மன்றச் செய்திகளைப் பகிர்வார்கள், நம் தொழில்களையும் நெசவாளர்களையும் அறிமுகப்படுத்துவார்கள், இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பார்கள், சமூகம் தவறாகச் சித்தரிக்கப்படும்போது குரல் கொடுப்பார்கள். பதிலுக்கு மன்றத்தின் அங்கீகாரம், சிறந்த படைப்புக்கு உதவி, சமூகத் தொழில்களுடன் பணி வாய்ப்பு.

    திறக்கவும்
  • 29கர்நாடக உறுப்பினர் சேர்க்கை

    கர்நாடகாவில் உள்ள தேவாங்கர்களுக்கான உறுப்பினர் சேர்க்கை; அவர்கள் நேரடியாக இந்த மன்றத்தில் சேர்கிறார்கள். கர்நாடகக் குழு அங்கு வட்டாரங்களை அமைத்து வருகிறது; இலக்கு 50,000 உறுப்பினர்கள்.

    திறக்கவும்
  • 30தேவாங்க ஆசிரியர் வலையமைப்பு

    பணியிலுள்ள மற்றும் ஓய்வுபெற்ற தேவாங்கப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், பயிற்றுநர்கள்: சமூக மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி, தொழில் வழிகாட்டல், தேர்வுப் பயிற்சி அளிப்பார்கள். தேவாங்க ஆசிரியர்கள் பணி பெறவும் இந்த வலையமைப்பு உதவும்.

    திறக்கவும்
  • 31இரத்த தான வலையமைப்பு

    உறுப்பினர்கள் தங்கள் இரத்த வகையையும் ஊரையும் கொடையாளராகப் பதிவு செய்கிறார்கள்; மன்றம் தொடர்ந்து இரத்த தான முகாம்கள் நடத்துகிறது. உறுப்பினர் குடும்பத்துக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டால், அருகிலுள்ள பொருத்தமான கொடையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும், அவர்களை நேரடியாக அழைக்கலாம்; ஒவ்வொரு கொடைக்கும் நன்றி தெரிவிக்கப்படும்.

    திறக்கவும்
  • 32அரசு நலத்திட்டங்கள்

    நெசவாளர்கள், மாணவர்கள், மருத்துவக் காப்பீடு, முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ஆகிய அரசுத் திட்டங்களைப் பெற உதவி. எந்தத் திட்டங்களுக்குத் தகுதி என்று அறியலாம், விண்ணப்பம் மற்றும் தொடர் நடவடிக்கைக்கு உதவி பெறலாம், வட்டாரத் திட்ட முகாம்களில் கலந்துகொள்ளலாம்.

    திறக்கவும்
  • 33கோயில்கள் கையேடு

    ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன், ராமலிங்கர் கோயில்கள் முதல் நம் சமூகம் நடத்தும் அல்லது தொடர்புடைய எல்லா தேவாங்கக் கோயில்களும் ஒரே இடத்தில்: இடம், விழாக்கள், பூஜை நேரம், வரலாறு, தொடர்பு. உறுப்பினர்கள் நம் கோயில்களைக் கண்டறிந்து செல்லலாம், விழாக்களை உயிர்ப்புடன் வைக்கலாம், நம் பாரம்பரியத்தைப் பதிவு செய்யலாம்.

    திறக்கவும்
  • 34மகளிர் இயக்கம்

    இன்னும் பல தேவாங்கப் பெண்களை மன்றத்தில் இணைக்கும் இயக்கம். எல்லா தேவாங்கப் பெண்களுக்கும் திறந்தது; ஒவ்வொரு வட்டாரத்திலும் பெண் தலைவர்களை உருவாக்கி, பெண்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் திறன், வருமானம், உடல்நலம், பாதுகாப்பு தரும்.

  • 35ஸ்ரீ சௌடேஸ்வரி கும்மி

    ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனைப் போற்றி தேவாங்கப் பெண்களும் சிறுமியரும் ஆடும் கும்மி, விழாக்களிலும் மன்ற நிகழ்வுகளிலும். ஒவ்வொரு வட்டாரத்துக்கும் சொந்தக் கும்மிக் குழு அமைய மன்றம் கற்றுத் தருகிறது; நம் பக்தியும் பாரம்பரியமும் நிலைக்கும், குடும்பங்கள் ஒன்றுசேரும்.

    திறக்கவும்

திட்டங்கள்