தலைமை நிர்வாகிகள்
மன்றத்தின் தலைமைக் குழு நிர்வாகிகள்.
பொறுப்பாளர்களின் கடமைகள்
1.தலைவர்· President
மன்றத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளுக்கும் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இவரே பொறுப்பாவார். செயற்குழு, தலைமைக் குழு, பொதுக்குழு ஆகிய கூட்டங்களுக்கு இவர் தலைமை வகித்து நடத்துவார்.
Responsible for all the work and development programmes that carry out the Mandram's aims. Chairs the executive committee, head committee and general body meetings.
2.இணைத் தலைவர்· Joint President
தலைவர் இல்லாத நேரங்களில் தலைவரின் பொறுப்புக்களையும், அதிகாரங்களையும் ஏற்பார். தலைவர் மற்றும் இணைத் தலைவர் இல்லாதபோது, கூட்டத்திற்கு வருகை தந்துள்ள பொறுப்பாளர்களிடையே தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு கூட்டத்தை நடத்த வேண்டும்.
Takes on the President's duties and powers when the President is absent. If both are absent, the office bearers present choose one of themselves to chair the meeting.
3.பொதுச் செயலாளர்· General Secretary
இவர் மன்றத்தின் அன்றாட நிர்வாகத்தை செயற்குழு, தலைமைக் குழு, பொதுக்குழு ஆகியவற்றின் தீர்மானங்களுக்கும், தலைவரின் கட்டுப்பாட்டிற்கும், ஆலோசனைக்கும் உட்பட்டுச் செயல்படுத்த வேண்டும். மன்றத்தின் கடிதப் போக்குவரத்து மற்றும் பத்திரிகை வெளியிடுவது இவரது பொறுப்பாகும்.
Runs the Mandram's daily administration under the resolutions of the executive committee, head committee and general body, and under the President's direction and advice. Responsible for the Mandram's letters and publications.
4.பொருளாளர்· Treasurer
பொருளாளர் மன்றத்தின் எல்லா வரவு செலவினங்களுக்கும், பணப் பாதுகாப்பிற்கும் பொறுப்பாவார். இவர் தலைமைக் குழுவின் தீர்மானங்களுக்கேற்ப மன்றத்தின் செலவினங்களுக்குத் தேவையான நிதியை அவ்வப்போது கொடுத்து வர வேண்டும். வரவு செலவு இனங்களுக்குச் சரியான கணக்குகளைப் பராமரித்து ஒவ்வொரு தலைமைக் குழுக் கூட்டத்திலும் தாக்கல் செய்ய வேண்டும். தலைமைக் குழுவின் வரவினங்களுக்கு இரசீது அளிக்கும் பொறுப்பு இவரைச் சார்ந்ததாகும்.
பொருளாளருடன் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் சேர்ந்து கையொப்பமிட்ட காசோலைகள் மூலமாக வங்கிக் கணக்கு நிர்வகிக்கப்படும்.
Responsible for all the Mandram's income and spending and for keeping its money safe. Releases money for expenses only as head committee resolutions direct. Keeps proper accounts and tables them at every head committee meeting, and issues receipts for all income. The bank account runs on cheques signed by the Treasurer together with the President or the General Secretary.
5.அமைப்புச் செயலாளர்· Organising Secretary
மன்றத்தின் அமைப்பு முறைகளில் ஏற்படும் தேவைகளைக் கவனித்து, உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வலுப்படுத்தும் பொறுப்பு இவர்களுக்கு உண்டு. புதிய வட்டாரங்களை உருவாக்குதல், உறுப்பினர்களின் வட்டார மாற்றங்களைக் கவனித்தல் போன்ற பணிகளைக் கவனித்துப் பொதுச் செயலாளருக்கு உதவியாக இருத்தல் வேண்டும்.
இந்த மூவரில் இருவர் வெளிமாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Look after the Mandram's organisational needs and grow and strengthen its membership. Start new vattarams, handle members moving between vattarams, and assist the General Secretary. Two of the three are elected from outside the state.
6.கொள்கை பரப்புச் செயலாளர்· Policy Propagation Secretary
மன்றத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு, தலைவரின் ஆலோசனைப்படி மன்றத்தின் கொள்கைகள், இலட்சியங்களைப் பரப்புவது இவரது பொறுப்பாகும். மன்ற நடவடிக்கைகளில் பொதுச் செயலாளருக்கு உதவியாக இருப்பார்.
Spread the Mandram's policies and ideals, on the President's advice, to carry out its aims. Assist the General Secretary in the Mandram's work.









