
எஸ். ஓம்சரவணா
தலைவர்
நிர்வாக இயக்குநர் — ஜே.கே.கே.என். கல்வி நிறுவனம் · B.Com., LL.B.
அறிமுகம்
- 1,500+ இலவச லேசர் அறுவை சிகிச்சைகள்
- 3,000+ இலவசக் கண் கண்ணாடிகள்
- 150+ மாணவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை
- குமாரபாளையம் ஜல்லிக்கட்டு நாயகர்
ஜே.கே.கே. நடராஜ செட்டியாரின் பேரனான எஸ். ஓம்சரவணா அவர்கள், ஜே.கே.கே.என். கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். நம்ம குமாரபாளையம் அமைப்பு, ஜே.கே.கே. நடராஜா நினைவு இயக்கம் ஆகியவற்றின் தலைவராகவும் செயல்படுகிறார். குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வைக் கொண்டு வந்த ‘ஜல்லிக்கட்டு நாயகர்’ என்றும், ‘கொடைவள்ளல்’ என்றும் போற்றப்படுபவர்.
மருத்துவ சேவை
கடந்த 6 ஆண்டுகளாகத் தனது பிறந்தநாளை முன்னிட்டு, 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச லேசர் அறுவை சிகிச்சை வழங்கும் மருத்துவ சேவைக்குப் பங்களித்து வருகிறார். கண் பார்வை தொடர்பான தேவையுள்ள மக்களுக்கு 3,000-க்கும் மேற்பட்ட இலவசக் கண் கண்ணாடிகள் வழங்கியுள்ளார். ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகளையும் மருத்துவ உபகரணங்களையும், அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
கல்வி உதவி
குமாரபாளையம் கல்வி வட்டாரம் அமைப்பின் மூலம், 3 ஆண்டுகளில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குக் கல்லூரிக் கல்விக் கட்டணத்தில் 50% வரை சலுகை வழங்கியுள்ளார்; 60-க்கும் மேற்பட்டோருக்கு இலவசக் கல்வி அளித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கியுள்ளார்.
திறன் மேம்பாடும் இளைஞர் வளர்ச்சியும்
கடந்த 10 ஆண்டுகளாக நம்ம குமாரபாளையம் அமைப்பின் மூலம் திறன் மேம்பாட்டு, தலைமைத்துவப் பயிற்சிகளை நடத்தி வருகிறார். AI தொழில்நுட்பம், உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி, சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பல பயிற்சிகளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
ஆன்மீகப் பணி
பல கோயில்களின் கும்பாபிஷேகங்களையும் கட்டுமானப் பணிகளையும் முன்னின்று நடத்தி, இலவச அன்னதானமும் வழங்கி வருகிறார்.
“கல்வி – மருத்துவம் – திறன் மேம்பாடு – இளைஞர் வளர்ச்சி” என்ற நோக்கத்தோடு சமூக முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும் ஓம்சரவணா அவர்களின் சேவை மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.
- வட்டாரம்
- கொமாரபாளையம் கல்வி வட்டாரம்
- கிளை
- ஹயக்ரீவர் கிளை
- மற்ற பொறுப்புகள்
- தலைவர் — கொமாரபாளையம் கல்வி வட்டாரம்
- தொலைபேசி
ஏற்றுகிறது…