உள்ளடக்கத்திற்குச் செல்
தலைமை நிர்வாகிகள்

D.S.சரவணன்

இணைத்தலைவர்

ஜவுளி ஏற்றுமதியாளர் · S R P எக்ஸ்போர்ட்ஸ், S R P டெக்ஸ்டைல்ஸ், கல்லாங்காடு டெக்ஸ்டைல்ஸ், சேலம்

அறிமுகம்

  • 487 மாணவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டில் இலவசக் கல்வி
  • 137 மாணவர்களுக்கு இலவசக் கல்லூரிக் கல்வி
  • 160 மாதங்கள் தொடர் அன்னதானம்
  • தாமரை தமிழ் இலக்கிய மன்றம் — 11 ஆண்டுகள்

சேலம் கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லாங்காடு D.S. சரவணன் அவர்கள், சேலத்தின் குறிப்பிடத்தக்க ஜவுளி ஏற்றுமதியாளர்களில் ஒருவர். கருங்கல்பட்டியில் S R P எக்ஸ்போர்ட்ஸ், S R P டெக்ஸ்டைல்ஸ், கல்லாங்காடு டெக்ஸ்டைல்ஸ் ஆகிய ஜவுளி உற்பத்தி நிறுவனங்களை நடத்தி வருகிறார். தொழிலுடன், கல்வி, விளையாட்டு, இலக்கியம், மருத்துவம், ஆன்மீகம் எனப் பல தளங்களில் சமூகப் பணியாற்றி வருகிறார்.

கல்வியும் விளையாட்டும்

சேலம் அமெச்சூர் பளு தூக்கும் சங்கத்தின் தலைவராக உள்ளார். இவரது தலைமையில், கடந்த பத்தாண்டுகளில் சங்கத்தின் மூலம் பளு தூக்கும் போட்டிகளில் தேர்ச்சி பெற்ற 487 மாணவர்கள், விளையாட்டு ஒதுக்கீட்டில் முத்தாயம்மாள், பாவை, ஞானமணி, ஏவிஎஸ் உள்ளிட்ட கல்லூரிகளில் இலவசமாகப் படித்து வருகின்றனர். சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளையின் செயலாளராக, அறக்கட்டளையின் மூலம் 137 மாணவர்கள் முழுவதும் இலவசமாகக் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

மருத்துவமும் அன்னதானமும்

அறக்கட்டளையின் மருத்துவச் சேவையாக, மக்கள் நலனுக்காக அக்டோபர் 2026 முதல் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் மருந்தகமும் இரத்தப் பரிசோதனை நிலையமும் தொடங்கப்பட உள்ளன. அருள் முருகன் அன்னதான டிரஸ்டின் துணைத் தலைவராக, 160 மாதங்களாக ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில், தனது அலுவலகத்தில் மூன்று மாதங்கள் நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீரைக் காய்ச்சி, தினமும் காலையில் 2,000 பேருக்கு வழங்கினார்.

தமிழ் இலக்கியம்

தாமரை தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவராக, கடந்த 11 ஆண்டுகளாகப் பல இலக்கியவாதிகளை அழைத்து வந்து, சேலம் குகை பகுதியில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

திருக்கோவில் பொறுப்புகள்

களரம்பட்டி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் தலைவர், கருங்கல்பட்டி ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவிலின் துணைச் செயலாளர், கருங்கல்பட்டி தெற்கு முனியப்பன் திருக்கோவிலின் துணைத் தலைவர், வீராணம் மூக்கர காளியம்மன் திருக்கோவிலின் கௌரவத் தலைவர், கருங்கல்பட்டி அருள் முருகன் திருக்கோவிலின் ஆலோசகர் எனப் பல திருக்கோவில்களில் பொறுப்பு வகித்து வருகிறார்.

தொழில், கல்வி, விளையாட்டு, இலக்கியம், மருத்துவம், ஆன்மீகம் எனப் பல தளங்களில் சேவையாற்றி வரும் D.S. சரவணன் அவர்களின் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறோம்.

வட்டாரம்
சேலம் மாநகர் வட்டாரம்
கிளை
சேலம் மாநகர் தெற்கு கிளை
தொலைபேசி

ஏற்றுகிறது…