
செல்வி வெங்கடாஜலம்
கொள்கை பரப்புச்செயலாளர்
கோவை ஸ்ரீ கணபதி நெய் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்
அறிமுகம்
- மகளிர் வட்டாரம் — நிறுவி வழிநடத்துபவர்
- ஆன்மீக எழுத்தாளர் · கவிஞர்
- Devanga World YouTube உரைகள்
- பத்தாண்டு மகளிர் சேவை
பல்வேறு பொதுச் சேவைகளிலும் சமூகப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயலாற்றி வருபவர். ஆன்மீகத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இவர், ஆன்மீகக் கட்டுரைகளும் கவிதைகளும் இயற்றி, தனது எழுத்தின் வழியே ஆன்மீகச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.
தேவாங்க மரபைப் பரப்பும் பணி
தேவாங்க வேர்ல்ட் (Devanga World) YouTube சேனல் வாயிலாக தேவாங்க புராணங்கள் குறித்துத் தொடர் உரைகள் ஆற்றியுள்ளார். குறிப்பாக, தேவல மகரிஷியின் ஏழு அவதாரங்கள் குறித்து விரிவாக உரையாற்றி, நமது சமுதாயத்தின் பெருமையையும் ஆன்மீக, வரலாற்றுச் சிறப்புகளையும் இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகிறார்.
மகளிர் முன்னேற்றம்
பெண்களின் ஒற்றுமை, முன்னேற்றம், திறன் மேம்பாடு ஆகியவற்றில் தனிக்கவனம் கொண்டவர். கடந்த பத்தாண்டுகளாக, கோவையில் அனைத்திந்திய தேவாங்க ஸ்ரீ சௌடேஸ்வரி நற்பணி மன்றத்தின் “மகளிர் வட்டாரம்” என்ற அமைப்பைப் பெண்களுக்காகப் பிரத்யேகமாக ஏற்படுத்தி வழிநடத்தி வருகிறார். அதன் செயலராக மாதந்தோறும் மகளிரை ஒருங்கிணைத்து, ஆன்மீகம், சமூக விழிப்புணர்வு, திறன் மேம்பாடு எனப் பயனுள்ள நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
ஆன்மீகம், இலக்கியம், சமூகச் சேவை, மகளிர் முன்னேற்றம் எனப் பல தளங்களில் பங்களிப்பு வழங்கி வரும் திருமதி செல்வி வெங்கடாசலம் அவர்களின் சேவைப் பயணம் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறோம்.
- வட்டாரம்
- கோவை ஸ்ரீ சௌடேஸ்வரி மகளிர் வட்டாரம்
- கிளை
- சண்முகா நகர் / சொக்கம்புதூர் ரோடு கிளை
- மற்ற பொறுப்புகள்
- செயலாளர் — கோவை ஸ்ரீ சௌடேஸ்வரி மகளிர் வட்டாரம்
- தொலைபேசி
ஏற்றுகிறது…