உள்ளடக்கத்திற்குச் செல்
தலைமை நிர்வாகிகள்

S.G. பிரபாகரன்

இணைத்தலைவர்

நிறுவனர் — அனைத்திந்திய நெசவாளர்கள் நலச் சங்கம் · மேச்சேரி

அறிமுகம்

  • Weaver Social Service Award — தமிழக ஆளுநர், 2024
  • Tamil Nadu Day Recognition
  • The Sunday Times (இலங்கை) சிறப்புக் கட்டுரை
  • 2000 முதல் சங்கப் பணி

சேலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மேச்சேரி மண்ணில், திரு. குணசேகரன் – திருமதி. மீனா தம்பதியரின் மகனாக 1982-இல் பிறந்தவர் திரு. மேச்சேரி பிரபாகரன் அவர்கள். குடும்பத்தின் பாரம்பரியத் தொழில் நுட்பங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர். 2000-ஆம் ஆண்டு முதல் சங்கத்தின் உறுப்பினராக இணைந்து, கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறார்.

ஆன்மீகப் பயணம்

1992-ஆம் ஆண்டு ஒரு கோவில் நிகழ்ச்சியில், குலகுரு அவர்களின் அருகில் செல்ல இயலாமல் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துத் தரிசனம் செய்த ஒரு சாதாரணப் பக்தனாகத் தொடங்கிய இவரது ஆன்மீகப் பயணம், இன்று குலகுரு அவர்களின் நேரடித் தொடர்பில், அவர்களுடன் இணைந்து பயணிக்கும் முக்கியத் தலைவராக இவரை உயர்த்தியிருக்கிறது.

நெசவாளர் நலனும் அங்கீகாரமும்

அனைத்திந்திய நெசவாளர்கள் நலச் சங்கத்தைத் தோற்றுவித்து, நெசவு சமூக மக்களின் முன்னேற்றத்திற்காகப் பல நலத்திட்டங்களைச் செய்து வருகிறார். இவரது நெசவாளர் சேவையைப் பாராட்டி, 2024-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களால் ‘Weaver Social Service Award’ வழங்கப்பட்டது; தமிழ்நாடு நாள் விழாவில் சிறப்பு அங்கீகாரமும் (Tamil Nadu Day Recognition) பெற்றார். இலங்கையின் ‘The Sunday Times’ நாளிதழில் இவரது சமூகச் சேவை குறித்துச் சிறப்புக் கட்டுரை வெளியாகி, சமூகத்திற்கும் நெசவுத் துறைக்கும் பெருமை சேர்த்தது.

ஆளுநர் வருகை

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N. ரவி அவர்களைச் சமூக மேடைக்கு அழைத்து வந்து, சுமார் 230 சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவித்ததுடன், ஆளுநர் அவர்களுக்குத் தன் இல்லத்தில் விருந்தோம்பலும் அளித்தார். மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ச்சியாகப் பங்கேற்ற ஆளுநர் அவர்கள், தேவாங்கர் சமுதாயத்தின் பெருமைகளையும் நெசவுத் தொழிலின் சிறப்பையும் பாராட்டிப் பேசினார்.

மேடையில் பேசுவதைவிட, பின்னணியில் நின்று அனைவரையும் ஒருங்கிணைக்கும் செயல்வீரரான திரு. மேச்சேரி பிரபாகரன் அவர்கள், 04.10.2026 முதல் மன்றத்தின் இணைத் தலைவராகப் பொறுப்பேற்கிறார். அவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

வட்டாரம்
மேச்சேரி சாமராஜ்பேட்டை வட்டாரம்
கிளை
கந்தசாமிபுரம் கிளை
மற்ற பொறுப்புகள்
  • தலைவர் — மேச்சேரி சாமராஜ்பேட்டை வட்டாரம்
தொலைபேசி

ஏற்றுகிறது…